முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் பெரியவர்கள் பலகாரம், பழங்கள் வாங்கி வந்திருந்தாலும்போகும்போது, குழந்தைகள் கையில் காசு கொடுத்துவிட்டுச் செல்வார்கள். பிள்ளைகளும் ஓடிப் போய் அம்மா கையில் அந்தக் காசைக் கொடுப்பார்கள். அம்மா ஆளுக்கோர் உண்டியல் வைத்திருப்பார்.அவரவர் கொடுக்கும் காசை அவரவர் உண்டியலில் போட்டு வைப்பார். அவ்வப்போது உண்டியலை எடுத்து, எடுத்துப் பார்த்து நிறைந்திருக்குமா எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கும் அலாதி சுகம் பிள்ளைகளுக்குக்கிடைக்கும். அந்தச் சுகத்தைப் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவாவதுஉண்டியல் வாங்கிக் கொடுங்கள்.
உண்டியல். நாமே சின்னச் சின்ன வெற்றிகளுக்குப் பரிசு கொடுக்க நினைத்தால் பணமாகக் கொடுக்கலாம். அப்போதுதான் பிள்ளைகளின் உண்டியல் நிறையும். ஓர் இலக்கு வைத்துக்கொள்ளச்சொல்லுங்கள். அந்த இலக்கை அடைந்ததும் உண்டியலைத் திறந்து, பணத்தை எண்ணிப்பார்க்கச் சொல்லுங்கள். அதோடு நீங்கள் கொஞ்சம் காசு போட்டு, ஆசைப்படும் பொருளை வாங்கிக் கொடுங்கள்.
தங்கள் உழைப்பில் கிடைத்த பொருள் என்ற சந்தோஷம் ஒரு பக்கம், ஒரு பொருள் வேண்டுமென்றால் அதற்காகக் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்ற யதார்த்தம் மறுபக்கம் என்று வாழ்க்கையைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள இந்த உண்டியல் கைகொடுக்கும்.
இனி எந்த வீட்டுக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது, அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வாருங்கள். அவர்களுடைய சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டிவிடுங்கள். சேமிப்பவர்களாக இருந்தால் ஊக்கு வியுங்கள். பரிசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது உண்டியல் வாங்கிக் கொடுங்கள்.
No comments:
Post a Comment