Friday, 25 September 2015

கணவர்கள் விற்கப்படும் கடை

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போகஅதிகமாகிக் கொண்டே போகும்.
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
இது தான் அந்த விதிமுறைகள்....
இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.."கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளேநுழைந்தார்...
முதல் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்". "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" மேலும்  "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"     
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்  "வேலை உள்ளவர்கள்" "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" மற்றும்  "வசீகரமானவர்கள்"
அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால்,மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....
நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்" "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" "வசீகரமானவர்கள்" மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...? கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும். அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்" "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" "வசீகரமானவர்கள்" "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்" மற்றும் "மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே.. அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....??? சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழிமட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"".....

                                                "எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!

Sunday, 13 September 2015

நேர்மை



   
 ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலைசெய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளைஇட்டார்.
   
 உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்கவேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கபோகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்தமேலாளர்என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதைஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில்ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகவளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார்செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என்கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்தகம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கிசென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்னஅனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும்உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையைநடுவதற்க்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும்தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்றுபேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில்செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை. ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள்உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன்தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையைவீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால்தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில்யாரிடமும் சொல்லவில்லை. ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளைமுதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமுதன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்துபோகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனைசமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள்முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்குநீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம்காட்டுங்கள் என்றாள். ராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்துசென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமானசெடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறுசொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியைவளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடையசெடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில்நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.
     ராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம்உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்தவிதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாகசொன்னான்.
முதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள்என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமதுகம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர்இவர்தான் என்றார். ராமுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில்செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பைகொடுக்கிறார் என்று குழம்பிபோனார். சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்துவளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும்அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள்அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள்அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்குபதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டுவந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன்என்றார்.
   
 நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை நேர்மையாகஇருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...! வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒருபோராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தைபாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது, நேர்மையை விதையுங்கள், பதவியும் புகழும் தேடிவரும்.